உன்னதப் பணி(யா) ஆசிரியப் பணி

தன்னலமில்லாதது ஆசிரியப்பணி என்னும் மரபுத்தொடர் பழங்கதையாய்......  தனியார் கல்லூரியில் உழைத்து(கசக்கிப் பிழிந்து சக்கையாகிப் போன பின்பு) வாழ்ந்த என்னைப் போன்ற பேராசிரியர்கள்(அரசு கல்லூரிப் பணி தகுதி அடிப்படையாய் கிடைத்தவுடன்) தலைப்பின் பாதியை நெஞ்சில் சுமந்தபடி சென்றபோது கிடைத்தது வேம்பின் பிழிவே. ஆசிரியப்பணி அறப்பணி, சமூகப்பணி என்றெண்ணி மாணவர்களுக்கு உழைக்க நேரிடும்போது மூன்றுவிதமான சவால்கள் நம்கண் முன்னே..... 1.சக ஆசிரியர்களின் அரசியல் 2.மாணவர்களின் அரசியல் 3.குடும்ப அரசியல். இம்மூன்று அரசியலையும் கற்று கரை தேர்ந்து எழுவதற்குள் ஆண்டு ஆறு ஓடியது. ஓய்வுதியர்கள் கிடைக்கும் பணப்பலனைக் கொண்டு வாழ்வது போன்று வாழத்  தீர்மானித்தபோது பழுத்த மரமே கல்லடிபடும் என்ற அனுபவமொழியினை முன்னே சென்றவர் உதித்திட மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் என் மனம் எழுந்தது.

Comments