பண்பாட்டு விழுமியங்கள்

இதயா மகளிர் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பூ முகாமில் கருத்தாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினேன். பண்பாட்டு விழுமியங்கள் என்னுந் தலைப்பில் நான் உரையாற்றினேன். எனது உரை முட்ந்த பின்னர் மதுரை சந்திரனின் நாட்டுப்புற பாடல்கள் இன்றைய திரைப்படங்களில் பெற்றுள்ள செல்வாக்கு குறித்து இசைவீச்சு செய்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர் திரு.ராம்பியர் தம் கருத்துரையினை ரத்தினச் சுருக்கமாய் எடுத்துக்கூற விழா இனிது முடிவுற்றது. விழா ஏற்பாட்டினை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் திருமதி பஞ்சவர்ணம், திருமதி நிர்மலா, மற்றும் செல்வி மகேஷ்வரி செய்து இருந்தனர். மாணவியருடன் மதிய உணவினைப் பகிர்ந்துண்ட பின்பு வழக்கமான அசை போடலுடன் வலையேற்றம் செய்கின்றேன்.







Comments