இடப்பெயர்வு

வழக்கமாக வருடந்தோறும் நடைபெறும் ஆசிரியர்கள் இடப்பெயர்வு வழக்கம் போல் நடைபெற்றது. எமது தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் 5 பேர் பணிமாற்றம் பெற்று மாறியதில் துறைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மன வருத்தங்கள் எத்துணை இருப்பினும் போகின்றவர்கள் சொல்லிச் செல்வது நாகரீகம், அம்மரபு மீறல் வெகுசாதாரணமாகிப் போனது.கல்லுரிக்குப் புதிய வரவு யாருமில்லை என்பதைவிட யாரும் விரும்பவில்லை என்னும் செய்தி மன உறுத்தலுக்கு வலிகோலியது. போகின்றவர்களில் ஒருவர் தன்னையறிதல் இல்லாமலே குறைகூறிச் சென்றதுதான் உச்சக் கட்ட வேதனை. கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்துவது குறித்த சிந்தனை இன்று முழுவதும் ஓடியது.குறையொன்றுமில்லை. நடப்பதை பார்வையாளனாக நான்.

Comments